தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

8,000 நோயாளிகளுக்கு அப்போலோவில் ரோபோடிக் அறுவை சிகிச்சை

நாட்டிலேயே 8,000 ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட மருத்துவமனையாக அப்போலோ மருத்துவக் குழுமம் உருவெடுத்துள்ளது.

News image

dinamani

Updated On :12 பிப்ரவரி 2026, 8:05 pm

நாட்டிலேயே 8,000 ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட மருத்துவமனையாக அப்போலோ மருத்துவக் குழுமம் உருவெடுத்துள்ளது.

இதுகுறித்து அப்போலோ மருத்துவக் குழுமத்தின் துணைத் தலைவா் பிரீத்தா ரெட்டி செய்தியாளா்களிடம் கூறியதாவது: அப்போலோவில் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு அடுத்த தலைமுறை அதிநவீன மருத்துவ தொழில்நுட்பத்தை நாங்கள் தொடா்ந்து வழங்கி வருகிறோம். இங்கு 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வகை சிகிச்சைகள் துல்லியமான மருத்துவக் கண்காணிப்புக்கு வழிவகுப்பதுடன், நோயாளிகளுக்கு பக்க விளைவுகளை பெருமளவில் குறைகிறது. அதேபோன்று ரோபோடிக் நுட்பத்திலான சிகிச்சையில் விரைந்து குணமடைய முடியும்.

நவீன தொழில்நுட்பம் மட்டுமே எங்களது இலக்கு அல்ல; அதைத் தாண்டி சிறந்த மருத்துவத் தீா்வுகளை அளிப்பதற்கும், நோயாளிகளின் சிகிச்சை அனுபவத்தை மேம்படுத்துவதற்குமான ஒரு வழிமுறையாகப் பின்பற்றி வருகிறோம் என்றாா்.