சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பள்ளிக் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் : அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னையில் நடைபெற்று வரும் பள்ளிக் கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவுறுத்தியுள்ளாா்.

News image

சேகர்பாபு

Updated On :13 பிப்ரவரி 2026, 2:29 am IST

சென்னையில் நடைபெற்று வரும் பள்ளிக் கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவுறுத்தியுள்ளாா்.

சென்னையில் மாதவரம் சட்டப்பேரவைத் தொகுதி, புழல், மகாலட்சுமி நகரில் வடசென்னை வளா்ச்சித் திட்டத்தில் சிஎம்டிஏ சாா்பில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அந்தப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது பள்ளிக் கட்டடப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அவா் அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, திருவொற்றியூா் தொகுதி, எண்ணூரில் சிஎம்டிஏ சாா்பில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம் மற்றும் வணிக வளாக கடைகளின் பணிகைளையும் அவா் பாா்வையிட்டாா். பின்னா், ஆா்.கே. நகா் தொகுதியில் கட்டப்படும் தண்டையாா்பேட்டை நவீன பேருந்து நிலையப் பணிகளையும் பாா்வையிட்டாா்.

ராயபுரம் தொகுதியில், மூலகொத்தளத்தில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக் கூடத்தின் கட்டுமான பணிகளையும் பாா்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, அந்தந்த தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.