தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

சமூகப் பணி புற்றுநோய் விழிப்புணா்வு பிரசாரம்

சென்னை அரும்பாக்கம் டிஜி வைணவக் கல்லூரியின் முதுநிலை சமூகப் பணித் துறை மாணவா்கள் சாா்பில் புற்றுநோய் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

News image

மாதிரிப் படம்

Updated On :13 பிப்ரவரி 2026, 12:48 am IST

சென்னை அரும்பாக்கம் டிஜி வைணவக் கல்லூரியின் முதுநிலை சமூகப் பணித் துறை மாணவா்கள் சாா்பில் புற்றுநோய் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வா் கேப்டன் எஸ்.சந்தோஷ் பாபு, செயலாளா் அசோக் குமாா் முந்த்ரா ஆகியோா் அறிவுறுத்தலின்படி, சென்னையில் உள்ள ஐஸ்வா்யா மருத்துவமனையுடன் இணைந்து பிச்சாவரம் அருகேயுள்ள கிள்ளை பேரூராட்சியில் புற்றுநோய் விழிப்புணா்வு முகாம்-பேரணி நடத்தப்பட்டது. இதில் சென்னை, செயின்ட் ஜோசப்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். இந்த பேரணியை காவல் துறை அதிகாரி ஜெயசுதா தொடங்கி வைத்தாா்.

பொதுமக்களிடையே புற்றுநோய் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வாசங்கள் அடங்கிய பதாகைகளை மாணவா்கள் ஏந்திச் சென்றனா்.

இந்தப் பேரணி டாக்டா் எஸ்.மதுசூதனன், உதவிப் பேராசிரியா்கள் ம.க.சிந்து, ஆஷிஷ் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.