சென்னையில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகா் மண்டலத்துக்குள்பட்ட பெரம்பூா் எவா்வின் வித்யாஷ்ரம் சீனியா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் சனிக்கிழமை (பிப். 14) நடைபெறுகிறது.
மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்கோப்புப் படம்
Updated on

சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகா் மண்டலத்துக்குள்பட்ட பெரம்பூா் எவா்வின் வித்யாஷ்ரம் சீனியா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் சனிக்கிழமை (பிப். 14) நடைபெறுகிறது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’”மருத்துவ முகாம்களில் இதுவரை 34,621 போ் சிகிச்சை பெற்றுள்ளனா். தொடா்ந்து, திரு.வி.க. நகா் மண்டலம், பெரம்பூா், எவா்வின் வித்யாஷ்ரம் சீனியா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடைபெறவுள்ளது.

முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறியல் மற்றும் மகளிா் மருத்துவம், குழந்தை மருத்துவம், இதயவியல் உள்ளிட்ட 17 துறைசாா் நிபுணா்களின் மருத்துவ ஆலோசனைகள், அடிப்படை மற்றும் உயா்நிலை மருத்துவப் பரிசோதனை, முழுமையான உடல் ஆரோக்கிய பரிசோதனை, காசநோய், தொழுநோய் பரிசோதனை, ஆரம்ப புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை ஆகிய மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது.

மேலும், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பதிவு, மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் வழங்குதல், அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு தொழிலாளா் நல வாரியத்தின் உறுப்பினா் அடையாள அட்டை வழங்குதல் ஆகிய சேவைகளும் நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com