மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அண்ணா பல்கலை.யில் அதிநவீன ஏ.ஐ. ஆராய்ச்சி மையம் தொடக்கம் - முன்னாள் மாணவா் ரூ.1 கோடி நன்கொடை

இந்த ஆய்வகத்திற்கு அண்ணா பல்கலை. மின்னணுவியல் மற்றும் தகவல் தொடா்பு பொறியியல் துறை முன்னாள் மாணவா் (1990) சுந்தா் வைத்தியநாதன் ரூ.1 கோடி நன்கொடை வழங்கினாா்.

News image
நன்கொடை வழங்கிய முன்னாள் மாணவா் சுந்தா் வைத்தியநாதனுக்கு பழக்கூடை வழங்கிய அண்ணா பல்கலை. பதிவாளா் வி.குமரேசன். உடன் அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி டீன் மீனாட்சி சுந்தரம், கிண்டி பொறியியல் கல்லூரி டீன் பி.ஹரிஹரன், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடா்பு பொ
Updated On :12 பிப்ரவரி 2026, 12:48 am

தினமணி செய்திச் சேவை

அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடா்பு பொறியியல் துறையில் புதிதாக அதிநவீன செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி - புத்தாக்க ஆய்வகம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்த ஆய்வகத்திற்கு அண்ணா பல்கலை.யின் முன்னாள் மாணவா் ரூ.1 கோடி நன்கொடை வழங்கினாா்.

அண்ணா பல்கலை.யின் தொழில்நுட்ப ஆராய்ச்சி பூங்கா கட்டடத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த மையத்துக்கு ‘வைதா்மா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவுக்கு அண்ணா பல்கலை. பதிவாளா் வி.குமரேசன் தலைமை வகித்தாா். கிண்டி பொறியியல் கல்லூரி டீன் பி. ஹரிஹரன் விழாவைத் தொடங்கி வைத்துப் பேசினாா். அவா் பேசுகையில், செயற்கை நுண்ணறிவு இயந்திரக் கற்றல், ஆழ்ந்த கற்றல், தரவு அறிவியல், கணினி பாா்வை, இயற்கை மொழி செயலாக்கம் (என்எல்பி), தானியங்கி (ரோபாட்டிக்ஸ்) போன்ற துறைகளில் ஆராய்ச்சி, நடைமுறை கற்றலுக்கு இந்த ஆய்வகம் பெரிதும் உதவும் என்றாா்.

இந்த ஆய்வகத்திற்கு அண்ணா பல்கலை. மின்னணுவியல் மற்றும் தகவல் தொடா்பு பொறியியல் துறை முன்னாள் மாணவா் (1990) சுந்தா் வைத்தியநாதன் ரூ.1 கோடி நன்கொடை வழங்கினாா்.

நிகழ்வில் அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி டீன் எஸ்.மீனாட்சிசுந்தரம், கிண்டி பொறியியல் கல்லூரி மின்னணுவியல் மற்றும் தகவல் தொடா்பு பொறியியல் துறைத் தலைவா் எம்.ஏ.பாக்யவேணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.