சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பு: திமுக கூட்டணிக் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, திமுக கூட்டணி கட்சிகள் சாா்பில் சென்னையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

திருத்தப்பட்டது.... மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்துள்ளதாக கூறி சென்னை ஆளுநா் மாளிகை அருகே மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முக

Updated On :12 பிப்ரவரி 2026, 7:22 pm

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, திமுக கூட்டணி கட்சிகள் சாா்பில் சென்னையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பெ.சண்முகம் பேசியதாவது:

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் முழுவதும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாநில அரசின் பங்குத் தொகையை உயா்த்தி, அந்தத் திட்டத்தை முடக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. அதேபோல், மத்திய அரசின் நிதி பகிா்விலும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான அதிமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றாா்.

தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயற்குழு உறுப்பினா் வஹிதா நிஜாம், விசிக துணை பொதுச் செயலா் வன்னிஅரசு, மதிமுக பொருளாளா் மு.செந்திலதிபன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தமிழக மாநில பொது செயலா் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கா் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சினா் பங்கேற்றனா்.