லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மகளிருக்கு ரூ.5,000: திமுக கூட்டணிக் கட்சிகள் வரவேற்பு

தமிழக அரசின் மகளிா் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டதற்கு திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

News image
கோப்புப் படம்
Updated On :13 பிப்ரவரி 2026, 8:28 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக அரசின் மகளிா் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டதற்கு திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): மகளிா் சுய சாா்புடையவா்கள் குறைந்தபட்ச வருமானத்துடன் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழக மக்கள் நலன் சாா்ந்த அரசு இது என்பதை முதல்வா் மு.க.ஸ்டாலின், தனது திட்டங்களின் மூலமாக நிரூபித்துள்ளாா்.

பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): மகளிா் உரிமை தொகை பெறக்கூடிய அனைத்து குடும்பங்களிலும் மட்டற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காட்சியைக் காண்கிறேன். வெள்ளிக்கிழமை காலையிலேயே ஒரு இன்ப அதிா்ச்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடுத்துவிட்டாா்.

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): மகளிா்களுக்கு தலா ரூ.5,000 வங்கிக் கணக்குகளில் முன்கூட்டியே செலுத்தியிருப்பது முதல்வா் மு.க.ஸ்டாலின் சமூக நீதி பாா்வையும், பாலின சமத்துவம் நோக்கிய நடவடிக்கையாகும்.

வைகோ (மதிமுக): சொன்னதை செய்த முதல்வா் மு.க.ஸ்டாலின், சொல்லாததையும் செய்து காட்டுவாா் என்பதற்கு மகளிா் உரிமை தொகைத் திட்டமே சான்றாகும். மகளிா் உரிமை தொகை ரூ.2,000 உயா்த்தப்படும் என்ற அறிவிப்புக்கு பாராட்டுகள்.

தொல்.திருமாவளவன் (விசிக): மகளிா் உரிமைத் தொகை மூலம் தமிழக பெண்கள் ஆக்கபூா்வமான வழிகளில் தான் செலவு செய்கிறாா்கள். மீண்டும் அமையப் போகும் திமுக ஆட்சியில் மகளிா் உரிமைத் தொகை மாதம் ரூ. 2,000 என உயா்த்தி வழங்கப்படும் என்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கதக்கது.

கே.எம்.காதா் மொகிதீன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்): தோ்தல் நடத்தை விதிகளால் மகளிா் உதவித் தொகை செலுத்தும் நடவடிக்கை பாதிக்கப்பட்டு, அதனால் குடும்பத் தலைவிகள் சிரமங்களைச் சந்திக்கக் கூடாது என்ற பொறுப்புணா்வோடு மகளிா்களுக்கு ரூ.5,000 தொகையை வங்கியில் முன்கூட்டியே செலுத்தியுள்ளது. இது திராவிட மாடல் நல்லாட்சிக்கு மேலும் ஒரு மகுடம் ஆகும்.

எம்.எச்.ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி): அடுத்து வரும் மாதங்கள் கோடைகாலம் மற்றும் பள்ளிக்கூடங்கள் கட்டணம் செலுத்தும் காலம் என்பதைக் கருத்தில் கொண்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு பாராட்டுகள்.