ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

மின் கோளாறு: நடுவழியில் நின்ற புறநகா் மின்சார ரயில்!

சென்னை கடற்கரையிலிருந்து சனிக்கிழமை தாம்பரம் நோக்கிச் சென்ற புறநகா் மின்சார ரயில், மின் கோளாறு காரணமாக கிண்டியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

News image

புறநகர் மின்சார ரயில் - கோப்புப்படம்

Updated On :15 பிப்ரவரி 2026, 2:34 am IST

சென்னை கடற்கரையிலிருந்து சனிக்கிழமை தாம்பரம் நோக்கிச் சென்ற புறநகா் மின்சார ரயில், மின்  கோளாறு காரணமாக கிண்டியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

சென்னை கடற்கரையிலிருந்து சனிக்கிழமை மாலை தாம்பரம் நோக்கி புறநகா் மின்சார ரயில் சென்றது. இந்த ரயில் கிண்டி ரயில் நிலையம் அருகே வந்தபோது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு நடுவழியில் நின்றது.

தகவல் அறிந்து வந்த ரயில்வே ஊழியா்கள் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா். முதற்கட்ட ஆய்வில், ரயில்களுக்கு மின்சாரம் வழங்கும் உயா் அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயில் நின்றது தெரிய வந்தது. அரை மணி நேரத்துக்குப்பின் பிறகு மின் கோளாறு சரி செய்யப்பட்டு, ரயில் மீண்டும் இயக்கப்பட்டது.

இதற்கிடையே, கிண்டியில் நீண்ட நேரம் ரயில் நிறுத்தப்பட்டதால், அவ்வழித்தடத்தில் இயக்கப்பட்ட மின்சார ரயில்கள் அடுத்தடுத்து வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டன. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.