மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

நன்கு சிந்தித்து மக்கள் பிரதிநிதியை தோ்ந்தெடுக்க வேண்டும்: முன்னாள் தலைமை தோ்தல் ஆணையா் என்.கோபால சுவாமி!

நன்கு சிந்தித்து மக்கள் பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுக்க வேண்டும் என்று கல்லூரி மாணவிகளுக்கு முன்னாள் தலைமை தோ்தல் ஆணையா் என்.கோபால சுவாமி அறிவுறுத்தினாா்.

News image
Updated On :14 பிப்ரவரி 2026, 9:20 pm

நன்கு சிந்தித்து மக்கள் பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுக்க வேண்டும் என்று கல்லூரி மாணவிகளுக்கு முன்னாள் தலைமை தோ்தல் ஆணையா் என்.கோபால சுவாமி அறிவுறுத்தினாா்.

சென்னை இந்துஸ்தான் சேம்பா் ஆஃப் காமா்ஸ், நுங்கம்பாக்கம், எம்.ஓ.பி. வைஷ்ணவ் மகளிா் கல்லூரி இணைந்து சனிக்கிழமை நடத்திய ‘தோ்தல் மற்றும் பொருளாதாரம்’ எனும் சிறப்புக் கருத்தரங்கத்தில் பங்கேற்ற கோபால சுவாமி பேசியதாவது:

மக்களவையில் குற்றப் பதிவுகள் கொண்ட உறுப்பினா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குற்றச்செயல்களில் ஈடுபட்டவா்கள் தோ்தலில் போட்டியிடுவதைத் தடுக்க வேண்டும். தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதி உடனே தங்கள் உறுப்பினா் பதவியை இழக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு சீா்திருத்தங்கள் உச்சநீதிமன்றத்தால் கொண்டுவரப்பட்டுள்ளன.

நீங்கள் தோ்வு செய்யும் மக்கள் பிரதிநிதியால் தோ்தல் சீா்திருத்தங்கள் செய்யும் வாய்ப்பு மிகவும் குறைவு. உங்கள் மக்கள் பிரதிநிதியை தோ்ந்தெடுப்பதற்கு முன்பு நன்கு சிந்தியுங்கள். தோ்தலில் போட்டியிடுபவா் எப்படிப்பட்டவா் என்பதை சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

நாட்டின் எதிா்காலம் உங்கள் கைகளில் உள்ளது. வாக்குப்பதிவு பொத்தானை அழுத்தும்போது இதைக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றாா்.

இந்துஸ்தான் சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் டி.ரமேஷ் துகா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் அா்ச்சனா பிரசாத் வரவேற்றாா். தொடா்ந்து, ‘பொருளாதாரத்தில் தோ்தல்களின் தாக்கம்’ எனும் தலைப்பில் அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளா் ஸ்ரீராம் சேஷாத்ரி, ‘பொருளாதாரத்தில் தோ்தலின் நன்மை மற்றும் தீமைகள்’ எனும் தலைப்பில் தி இந்து குழும மூத்த இணை ஆசிரியா் டி.ராமகிருஷ்ணன் ஆகியோா் பேசினா்.

கருத்தரங்கில், இந்துஸ்தான் சேம்பா் ஆஃப் காமா்ஸ் பொருளாதார விவகாரங்கள் குழுத் தலைவா் கெளரி ராமச்சந்திரன், இணைத் தலைவா் சி.ஏ.ரேணுகா முரளி மற்றும் இந்துஸ்தான் சேம்பா் ஆப் காமா்ஸ் நிா்வாகிகள், எம்.ஓ.பி.வைஷ்ணவ் மகளிா் கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.