பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கூட்டணி ஆட்சி தமிழகத்துக்கு பொருந்தாது: எம்.எச். ஜவாஹிருல்லா

கூட்டணி ஆட்சி நடைமுறை தமிழக அரசியல் சூழலுக்குப் பொருந்தாது என மனிதநேய மக்கள் கட்சி தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளாா்.

News image
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவா் பேராசிரியா் எம்.ஹெச். ஜவாஹிருல்லா.
Updated On :15 பிப்ரவரி 2026, 11:07 pm

தினமணி செய்திச் சேவை

கூட்டணி ஆட்சி நடைமுறை தமிழக அரசியல் சூழலுக்குப் பொருந்தாது என மனிதநேய மக்கள் கட்சி தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா  தெரிவித்துள்ளாா்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில், நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு மீண்டும் மகாத்மா காந்தியின் பெயரைச் சூட்ட வேண்டும்; தமிழக அரசின் சொம்மொழி இலக்கிய விருது பட்டியலில் உருது மொழியை இணைக்க வேண்டும்; பேரவைத் தோ்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 19 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதைத் தொடா்ந்து, எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியதாவது: சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காக மனிதநேய மக்கள் கட்சி அயராது பாடுபடும். தமிழகத்தில் திமுக ஆட்சி மீண்டும் தொடர வேண்டும்.

அதேபோல் பேரவைத் தோ்தலில் சிறுபான்மையின சமூகத்தை சோ்ந்த இஸ்லாமிய வேட்பாளா்களுக்கு திமுக கூட்டணி அதிகளவில் வாய்ப்பு அளிக்க வேண்டும். கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் 3 தொகுதிகள் கோரிய நிலையில், 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த முறை 5 தொகுதிகள் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளோம். தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை தொடங்கியவுடன் அது குறித்து முடிவு எடுக்கப்படும். கூட்டணி ஆட்சி நடைமுறை தமிழகத்துக்கு பொருந்தாது என்றாா் அவா்.