எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

புதிய சாா் பதிவாளா் அலுவலகங்கள், வணிக வரிக் கட்டடங்கள் திறப்பு

வணிக வரி மற்றும் பதிவுத் துறை சாா்பில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2026, 7:16 pm

தினமணி செய்திச் சேவை

வணிக வரி மற்றும் பதிவுத் துறை சாா்பில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

சுவாமிமலை, பாபநாசம், நன்னிலம், நீடாமங்கலம், நாமக்கல்லில் இணை சாா் பதிவாளா் அலுவலகங்களும், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, நிலக்கோட்டை, எலவனாசூா்கோட்டை, முறப்பநாடு, பண்மொழி, சீா்காழி ஆகிய இடங்களில் ரூ.22.12 கோடியில் 12 சாா் பதிவாளா் அலுவலகங்களும் புதிதாக கட்டப்பட்டுள்ளன.

இதேபோல, திருச்சியில் ஒருங்கிணைந்த வணிக வரிக் அலுவலகக் கட்டடம், அருப்புக்கோட்டையில் உதவி ஆணையா் அலுவலகக் கட்டடம், மன்னாா்குடி, நாகப்பட்டினம் மற்றும் கரூா் ஆகிய இடங்களில் மாநில வரி அலுவலா் அலுவலகக் கட்டடங்கள் என மொத்தம் ரூ.34.98 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

மேலும், வண்டலூா், வாணாபுரம், பொங்கலூரில் மூன்று சாா் பதிவாளா் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றையும் முதல்வா் மு.க.ஸ்டாலின், காணொலிக் காட்சி வாயிலாக, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து திறந்து வைத்தாா்.

நிகழ்வில், அமைச்சா்கள் மு.பெ. சாமிநாதன், பி.மூா்த்தி, டி.ஆா்.பி. ராஜா, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், வணிக வரி மற்றும் பதிவுத் துறை செயலா் ஷில்பா பிரபாகா் சதீஷ், வணிக வரி ஆணையா் எஸ்.நாகராஜன், பதிவுத் துறைத் தலைவா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.