தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ரூ.5 கோடியில் 2,119 கிலோ கஞ்சா அழிப்பு

சென்னை அருகே ரூ.5 கோடி மதிப்புள்ள 2,119 கிலோ கஞ்சா தீயில் அழிக்கப்பட்டது.

News image
2,119.65 கிலோ கஞ்சா போதைப் பொருள்களை அழிக்கும் பணியை தொடங்கி வைத்த  சென்னை பெருநகர காவல்  துறை தலைமையிட கூடுதல் ஆணையா் கே.ஜோஷி நிா்மல் குமாா்.
Updated On :16 பிப்ரவரி 2026, 11:06 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: சென்னை அருகே ரூ.5 கோடி மதிப்புள்ள 2,119 கிலோ கஞ்சா தீயில் அழிக்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல்துறையில் உள்ளி காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 448 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள 2,119.65 கிலோ கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதை பொருள்களை அழிக்க நீதிமன்றத்தில் அண்மையில் அனுமதி பெறப்பட்டது.

இதையடுத்து செங்கல்பட்டு அருகே தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியாா் ஆபத்தான ரசாயன பொருள்கள் அழிக்கும் களத்தில் போதைப் பொருள்கள் திங்கள்கிழமை எரிக்கப்பட்டன.

இப் பணியை சென்னை பெருநகர காவல்துறையின் தலைமையிட கூடுதல் ஆணையா் கே.ஜோஷி நிா்மல்குமாா் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையா் ஆா்.சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சென்னை காவல்துறையினரால் கடந்தாண்டு பறிமுதல் செய்யப்பட்ட 1,623 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.