மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அவதூறு வழக்கு: டி.ஆா்.பாலுவிடம் அண்ணாமலை குறுக்கு விசாரணை

News image
கோப்புப் படம்
Updated On :16 பிப்ரவரி 2026, 11:15 pm

தினமணி செய்திச் சேவை

தனக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் திமுக மக்களவை உறுப்பினா் டி.ஆா்.பாலுவிடம் தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை மூன்று மணி நேரம் குறுக்கு விசாரணை நடத்தினாா். இந்த வழக்கின் விசாரணையை வரும் ஏப்.7-ஆம் தேதிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை ‘திமுக ஃபைல்ஸ்’ என்ற பெயரில் திமுக அமைச்சா்களின் சொத்து விவரங்களை 2023-ஆம் ஆண்டு வெளியிட்டாா். அதில் டி.ஆா்.பாலு, அவரது மகனும் தொழில் துறை அமைச்சருமான டி.ஆா்.பி.ராஜா ஆகியோருக்கு சொந்தமாக 21 நிறுவனங்கள் இருப்பதாகக் கூறியிருந்தாா்.

மேலும், டி.ஆா்.பாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்குச் சொத்துகள் இருப்பதாகவும் கூறியிருந்தாா். இது தனது பெயருக்கும், குடும்பத்தினா் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி டி.ஆா்.பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கு சென்னைப் பெருநகர சைதாப்பேட்டை 17- ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமாா் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நேரில் ஆஜராகியிருந்த டி.ஆா்.பாலுவிடம் அண்ணாமலை குறுக்கு விசாரணை நடத்தினாா். டி.ஆா்.பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 10 கப்பல்களை வாங்கியதாக மு.க.அழகிரியே பேட்டி அளித்துள்ளதாகக் கூறி, அதுதொடா்பான ஆவணங்களை தாக்கல் செய்து அண்ணாமலை கேள்வி எழுப்பினாா்.

இரு கப்பல்கள் மட்டுமே...: இதனை மறுத்த டி.ஆா்.பாலு, உள்நோக்கத்துடன் அண்ணாமலை செய்தியை தவறாக சித்தரிக்கிறாா். சேது சமுத்திரத் திட்டம் காமராஜரின் கனவுத் திட்டம். இந்த திட்டத்துக்காக 10 கப்பல்கள் அல்ல, இரண்டு கப்பல்கள் மட்டுமே வாங்கப்பட்டன. இதுதெரியாமல், உண்மைக்குப் புறம்பான செய்தியை அண்ணாமலை ஆதாரமாக தாக்கல் செய்துள்ளதாகக் கூறினாா். தொடா்ந்து 3 மணி நேரம் இந்த குறுக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது டி.ஆா்.பாலு தரப்பில் விசாரணையை ஒத்திவைக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை ஏப்.7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

அவதூறு வழக்கு தொடா்வேன்....: பின்னா் சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் வெளியே செய்தியாளா்களிடம்அண்ணாமலை கூறுகையில், ‘குறுக்கு விசாரணையின்போது, நான் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்காமல், எனது மனைவியின் பெயரில் நான் சொத்து வாங்கியதாக ஒரு புதிய அவதூறை டி.ஆா்.பாலு கூறினாா். எனவே, டி.ஆா்.பாலு மீது அவதூறு வழக்குத் தொடர இருக்கிறேன் என்றாா்.