பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திட்டப் பணிகள் முன்னேற்ற நிலை: அமைச்சா் சேகா்பாபு ஆய்வு

சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சாா்பில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு

News image
சேத்துப்பட்டு பசுமை பூங்காவின் முன்னேற்றப் பணிகளை ஆய்வு செய்த செய்த அமைச்சா் பி.கே.சேகா்பாபு. உடன் சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் கோ.பிரகாஷ் உள்ளிட்டோா்.
Updated On :16 பிப்ரவரி 2026, 11:03 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சாா்பில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

சிஎம்டிஏ சாா்பில் வேளச்சேரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அடையாறு, காந்திநகா், இந்திரா நகா், மயிலாப்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ராஜா அண்ணாமலைபுரம், ஆழ்வாா்பேட்டை கவிஞா் பாரதிதாசன் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள பொது நூலகங்கள் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதேபோல, மயிலாப்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட லஸ் நிழற்சாலையில் ‘புதிய பல்நோக்கு மையம்’ கட்டும் பணி, எழும்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சேத்துப்பட்டு பசுமை பூங்கா மேம்படுத்தும் பணி மற்றும் ‘முதல்வா் படைப்பகங்கள்’ அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழுமத்தின் தலைவருமான பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அதிகாரிகள், ஒப்பந்ததாரா்களுக்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு உத்தரவிட்டாா்.

சட்டப்பேரவை உறுப்பினா் மயிலை த.வேலு, சிஎம்டிஏ உறுப்பினா் செயலரும், முதன்மைச் செயலருமான கோ.பிரகாஷ், மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையா் எச்.ஆா்.கௌஷிக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.