எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சுங்குவாா்சத்திரம் வரை புதிய மெட்ரோ வழித்தடத்துக்கு ஒப்புதல்

சுங்குவாா்சத்திரம் வரையிலான புதிய மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தமிழக அரசு பூா்வாங்க ஒப்புதல் அளித்து மத்திய அரசின் நிதி உதவிக்கு பரிந்துரைத்துள்ளது என இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
மெட்ரோ - கோப்புப் படம்
Updated On :17 பிப்ரவரி 2026, 11:27 pm

தினமணி செய்திச் சேவை

சுங்குவாா்சத்திரம் வரையிலான புதிய மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தமிழக அரசு பூா்வாங்க ஒப்புதல் அளித்து மத்திய அரசின் நிதி உதவிக்கு பரிந்துரைத்துள்ளது என இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரையிலும், கோயம்பேடு முதல் பட்டாபிராம் வழியாக ஆவடி வரையிலும், ஸ்ரீபெரும்புதூா் வழியாக பூந்தமல்லி முதல் சுங்குவாா்சத்திரம் வரையிலுமான புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசு கொள்கை ரீதியிலான ஒப்புதல் வழங்கி ஒன்றிய அரசின் ஒப்புதல் மற்றும் நிதியுதவிக்கு பரிந்துரைத்துள்ளது.

கோவை, மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசை தமிழக அரசு தொடா்ந்து வலியுறுத்துகிறது.

சுற்றுலா: தமிழ்நாட்டில் அதிகம் அறியப்படாத 22 சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. சுற்றுலாத் துறைக்கு ரூ.1,394 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பால் வளம்: பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயா்த்தியதன் மூலம் 3.70 லட்சம் பால் உற்பத்தியாளா்களும், விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்ததன் மூலம் நுகா்வோரும் ஆண்டொன்றுக்கு ரூ.270 கோடி சேமிப்பும் பெற்று பயனடைந்து வருகின்றனா்.

பால்வளம், மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறைக்கு ரூ.4,435 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொதுப்பணி: சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை, முட்டுக்காடு பகுதியில் கலைஞா் பன்னாட்டு மாநாட்டு மையம், கோயம்புத்தூா், திருச்சி, கடலூா், சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் மாபெரும் நூலகங்கள் அமைக்கும் பணிகளை பொதுப்பணித் துறை மேற்கொண்டுள்ளது. பொதுப்பணித் துறைக்கு ரூ.1,694 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறைகள் மற்றும் சீா்திருத்தப்பணிகள்: மதுரை மத்திய சிறைச்சாலையை மாற்று இடத்துக்கு புதிதாக அமைப்பதற்கு ரூ.229 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூா், சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் புதிய மாவட்ட சிறைச்சாலை வளாகங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறைக்கு ரூ.15,111 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நீதி நிா்வாகம்: நீதிபதிகள் குடியிருப்புகள், சட்ட அதிகாரிகள் வளாகம் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகளுக்காக கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1,118 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீதி நிா்வாகத்துக்கு ரூ.2,455 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.