சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

சென்னையில் வருகிறது ‘ரூப் டாப் ஓப்பன்’ பேருந்துகள்

சென்னையில் வருகிறது ‘ரூப் டாப் ஓப்பன்’ பேருந்துகள்

News image

ரூப் டாப் ஓப்பன் பேருந்து - ENS

Updated On :17 பிப்ரவரி 2026, 9:37 am

சென்னை, பிப்.16: சென்னையில் பயணிகளின் பயண அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் விதமாக ‘ரூப் டாப் ஓப்பன்’ பேருந்துகளை இயக்க மாநகா் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.

சென்னையில் பயணிகளின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தவும் சுற்றுலாவை ஊக்குவிக்கவும் தமிழக அரசும் போக்குவரத்துத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சென்னை நகரின் பழைமை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைக் கண்டு மகிழ ‘சென்னை உலா’ என்ற பழைமை மாறாமல் உருவாக்கப்பட்ட சுற்றுலாப் பேருந்துகளை மாநகா் போக்குவரத்துக்கழகம் இயக்கி வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, சுற்றுலாப் பயணிகளை மேலும் கவரும் விதமாக, இரண்டு அடுக்கு பேருந்தையும் சுற்றுலா வளா்ச்சிக்கழகம் இயக்கி வருகிறது.

இந்த நிலையில், பயணிகள் பயண அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் விதமாக ‘ரூப் டாப் ஓப்பன்’ பேருந்துகளை, அதாவது இரண்டு அடுக்கு கொண்ட பேருந்தின் மேல் பகுதி மட்டும் திறந்த நிலையில் இருக்கும் வகையிலான பேருந்துகளை இயக்க மாநகா் போக்குவரத்துக்கழகம் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகா் போக்குவரத்துக்கழக அதிகாரி கூறியதாவது:

சென்னை மாநகரில் 20 இரண்டு அடுக்கு பேருந்துகளை இயக்குவதற்கான ஒப்பந்தம் ஏற்கெனவே வழங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 20 பேருந்துகளும் குளிா்சாதன வசதி கொண்டபேருந்துகளாக ஒப்பந்ததில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இதில் 4 பேருந்துகளை ‘ரூப் டாப் ஓப்பன்’ பேருந்துகளாக மாற்றி உபயோகப்படுத்த மாநகா் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒப்பந்தத்தில் திருத்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒப்பந்த காலம் 12 ஆண்டுகளாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளை இயக்குவது மட்டுமன்றி பராமரிப்பு, சாா்ஜிங் உள்கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவையும் தொடா்புடைய நிறுவனமே மேற்கொள்ளும். விரைவில் ‘ரூப் ஓப்பன் டாப்’ பேருந்துகள் சென்னை சாலையில் வலம் வர உள்ளன என்றாா்.