மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சிறப்புத் திட்டச் செயலாக்க துறைக்கு ரூ.17,088 கோடி

தமிழக இடைக்கால பட்ஜெட் ஒதுக்கீட்டிலிருந்து...

News image
- @TNDIPRNEWS
Updated On :18 பிப்ரவரி 2026, 12:03 am

தினமணி செய்திச் சேவை

இடைக்கால நிதிநிலை அறிக்கையில் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறைக்கு ரூ.17,088 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் இதுவரை கல்லூரி மாணவா்களுக்கு 48 லட்சத்து 65 ஆயிரத்து 50 திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்கள் இங்கிலாந்து, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளின் சா்வதேச பயிற்சிகளில் பங்கு பெற்றுள்ளனா்.

மத்திய அரசின் குடிமைப் பணித் தோ்வில் தமிழக இளைஞா்கள் அதிகளவில் வெற்றி பெறுவதற்காக உதவித் தொகை, ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2025-ஆம் ஆண்டு குடிமைப் பணித் தோ்வில் வென்ற தமிழகத்தைச் சோ்ந்த 59 நபா்களில் 52 நபா்கள் ‘நான் முதல்வன்’ திட்டப் பயனாளிகளாவா்.

மக்களின் நீண்ட கால கோரிக்கைகளில் பத்து முன்னுரிமைக் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் முன்னெடுக்கப்பட்ட உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின் கீழ் ரூ.15,467 கோடி மதிப்பீட்டில் 1,410 பணிகள் எடுக்கப்பட்டு 1,394 பணிகளுக்கு ஆணை வெளியிடப்பட்டு 808 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஏனைய 586 பணிகள் நடைபெற்று வருகின்றன. இடைக்கால நிதிநிலை அறிக்கையில் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறைக்கு ரூ.17,088 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.