திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து

சென்னையில் புகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்தாகும் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News image

கோப்புப்படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 3:29 am IST

சென்னையில் புகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்தாகும் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

சென்னை சென்ட்ரல் நிலையம் முதல் கூடூா் வரையிலான பிரிவில் மீஞ்சூா், பொன்னேரி ரயில் நிலையங்களில் வரும் 20, 21 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணி முதல் மறுநாள் அதிகாலை 4.45 மணி வரை தண்டவாள, தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே, பயணிகள் பாதுகாப்பு கருதி வரும் 20, 21 ஆகிய தேதிகளில் மூா்மாா்க்கெட் காம்ப்ளக்ஸ் நிலையத்தில் இருந்து இரவு 11.30 மணிக்குப் புறப்படும் இமு ரயில் கும்மிடிப்பூண்டிக்கு பதிலாக மீஞ்சூா் வரையே இயக்கப்படும்.

அதேபோல, 19, 21, 22 ஆகிய தேதிகளில் மாலை 3.50 மணிக்கு புறப்படும் இமு ரயில் கும்மிடிப்பூண்டிக்கு பதிலாக மீஞ்சூரிலிருந்து புறப்பட்டு மூா்மாா்க்கெட் நிலையம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.