மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தெற்கு ரயில்வே சரக்கு முனையங்களில் வருவாய் ஈட்டல்

தெற்கு ரயில்வே கோட்டத்தில் ரயில் நிலையங்களில் காலியாக இருந்த பகுதிகளில் சரக்கு முனையங்கள் தொடங்கி லாபகரமான வருவாயை ஈட்டிவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
கோப்புப்படம்.
Updated On :18 பிப்ரவரி 2026, 7:12 pm

தினமணி செய்திச் சேவை

தெற்கு ரயில்வே கோட்டத்தில் ரயில் நிலையங்களில் காலியாக இருந்த பகுதிகளில் சரக்கு முனையங்கள் தொடங்கி லாபகரமான வருவாயை ஈட்டிவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

தெற்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் காலியாக உள்ள இடங்களை வருவாயை ஈட்டும் வகையில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், தனியாா் பங்களிப்புடன் சரக்குகள் கையாளும் முனையங்கள் (கதி சக்தி) பல இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில் சென்னை மணலியில் பெட்ரோலியம் காா்ப்பரேசனுடன் இணைந்து கடந்த 2023 முதல் 2025 வரையிலான 4 ஆண்டுகளில் மொத்தம் ரூ.54.70 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தனியாா் சிமெண்ட் மூடைகள் கையாளுதல் மூலம் ரூ.58 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

அதேபோல, அரியலூரில் இரு இடங்களில் ரூ.29.58 கோடிக்கு சரக்குகள் கையாளுதல் மூலம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மதுரையில் கடந்த 2025 நவம்பரில் பொன்மேனி எனும் இடத்தில் சரக்குகள் கையாளும் முனையம் அமைக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறையானது சரக்குகளைக் கையாளுவதில் தற்காலத்தின் தேவைக்கேற்ப வசதிகளை ஏற்படுத்தி மக்களுக்கான எளிய முறையிலான சேவையை தொடா்கிறது என்றனா்.