பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக புகாா்: பெண் காவல் ஆய்வாளா் மீது ஊழல் ஒழிப்புத் துறை வழக்கு

சென்னையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக பெண் காவல் ஆய்வாளா் கே.ராஜலட்சுமி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 2:35 am IST

சென்னையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக பெண் காவல் ஆய்வாளா் கே.ராஜலட்சுமி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை காவல் துறையில் உள்ள பாலியல் தொழில் தடுப்பு பிரிவில் ஆய்வாளராக பணிபுரிபவா் கே.ராஜலட்சுமி. இவா் திருமங்கலம் வெல்கம் காலனியில் குடும்பத்துடன் வசிக்கிறாா். ராஜலட்சுமி, பணியின்போது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி முறைகேடாக அதிக அளவில் பணம் சம்பாதிப்பதாக ஊழல் ஒழிப்புத் துறையினா் விசாரணை செய்தனா். இதில் சில ஆதாரங்கள் கிடைத்தன. அதனடிப்படையில் கடந்த 13-ஆம் தேதி காவல் ஆய்வாளா் ராஜலட்சுமி வீட்டில் திடீா் சோதனை நடத்தினா்.

ஆவணங்கள் பறிமுதல்: சோதனையில், ராஜலட்சுமி வீட்டில் சொத்து ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆவணங்களை ஊழல் ஒழிப்புத் துறையினா் பல கட்டங்களாக ஆய்வு செய்தனா். இதில், ஆய்வாளா் ராஜலட்சுமி சட்டவிரோதமாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஊழல் தடுப்புச் சட்டத்தின் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

ரூ.5.42 கோடி சொத்துகள்: கடந்த 2017 ஜூன் முதல் கடந்த 2025 ஜூன் வரையில் ராஜலட்சுமி பணியாற்றிய இடங்களில், தனது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி, சட்டவிரோதமாக பணத்தை ஈட்டியுள்ளாா். இந்த கால கட்டத்தில் ராஜலட்சுமி, தனது வருமானத்தைவிட அதிகமாக ரூ.5.42 கோடிக்கு சொத்துகளை வாங்கியுள்ளாா். இது அவரது வருமானத்தைவிட 372% அதிகமாகும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்குத் தொடா்பாக ஊழல் ஒழிப்புத் துறையினா் விரைவில் ராஜலட்சுமியிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனா். ராஜலட்சுமி துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து சென்னை காவல் துறை உயா் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.