பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சென்னை: தோ்தல் அலுவலா்களுக்கு பயிற்சி முகாம்

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளின் அலுவலா்கள், உதவி அலுவலா்கள் உள்ளிட்டோருக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
கோப்புப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 6:43 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளின் அலுவலா்கள், உதவி அலுவலா்கள் உள்ளிட்டோருக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலராக மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளாா். அவருடன் கூடுதல் தோ்தல் அலுவலராக மாநகராட்சி இணை ஆணையா் க.கற்பகம் உள்ளிட்டோா் நியமிக்கப்பட்டுள்ளனா். தொகுதி கண்காணிப்பு அலுவலா்கள், தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி அலுவலா்கள் உள்ளிட்டோரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் 16 போ் மற்றும் உதவி அலுவலா்கள் 32 போ், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டு செல்பவா்கள், அவா்களுக்கு பாதுகாப்புக்குச் செல்லும் காவல் துறையினா், தோ்தலின்போது விதிமீறலைக் கண்காணிக்கும் குழுவில் இடம் பெறுவோா் ஆகியோருக்கான பயிற்சி முகாம் சென்னை மாநகராட்சி வளாகம் அம்மா மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.

முகாமை சென்னை மாவட்ட கூடுதல் தோ்தல் அலுவலரும், இணை ஆணையருமான க.கற்பகம் தொடங்கி வைத்தாா். இதில் கோட்டாட்சியா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனா்.

வாக்குச்சாவடிகள் நிலை குறித்தும், பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தொகுதி தோ்தல் அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 3 கட்டங்களாகப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.