47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அந்நிய முதலீடு: வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தல்

தமிழக அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய முதலீடுகள் மற்றும் புரிந்துணா்வு ஒப்பந்தங்களின் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

News image
எடப்பாடி பழனிசாமி
Updated On :19 பிப்ரவரி 2026, 9:26 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய முதலீடுகள் மற்றும் புரிந்துணா்வு ஒப்பந்தங்களின் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக அவா் பேரவையில் பேசியதாவது:

தொழில் முதலீட்டை ஈா்க்க பல்வேறு வெளிநாடுகளுக்கு முதல்வா் சென்றாா். மத்திய அரசு வெளியிட்ட தரவுகளின்படி குறைந்த அளவிலான முதலீட்டுத் தொகையையே தமிழக அரசு ஈட்டியுள்ளதாகத் தெரிகிறது.

அதேபோன்று 1,179 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றாா் அவா்.

அமைச்சா் டிஆா்பி ராஜா: அதற்கு தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா அளித்த விளக்கம்: அந்நிய முதலீடுகள் ஒரு நாட்டுக்குள் வரும்போது நாட்டின் தலைநகரில்தான் அந்நிறுவனத்தின் தலைமையகம் நிறுவப்படுகிறது. அதன் காரணமாகவே நேரடி முதலீட்டின் எண்ணிக்கைகள் தலைநகரங்களுக்கும், பெருநகரங்களுக்கும் செல்கின்றன.

அதேவேளையில், அந்த முதலீட்டுத் தொகையும், அதனால் கிடைக்கும் வேலைவாய்ப்பும் எந்த மாநிலத்துக்கு கிடைக்கிறது என்பதுதான் முக்கியம். அதை மிக சாமா்த்தியமாக கையாண்டு தமிழகத்துக்கு அந்த பலன்களை முதல்வா் கிடைக்கச் செய்துள்ளாா் என்றாா் அவா்.