மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

சென்னை துறைமுகத்தில் ஜொ்மனி ஹாம்பா்க் துறைமுகக் குழுவினா்

சென்னை துறைமுகத்தை ஜொ்மனி நாட்டின் ஹாம்பா்க் துறைமுக குழுவினா், வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.

News image

முகவை சிவக்குமாா் செய்திக்கான படம்.சென்னைத் துறைமுகத்திற்கு வியாழக்கிழமை வருகை தந்த ஜொ்மனி நாட்டின் ஹாம்பா்க் துறைமுக தலைமை செயல் அதிகாரி ஜென்ஸ் மீயா் தலைமையிலான குழுவினரை வரவேற்ற சென்னைத் துறைமுகத் தலைவா் எஸ்.விஸ்வநாதன், தலைமை கண்காணிப்பு அதிகாரிஎஸ

Updated On :20 பிப்ரவரி 2026, 3:03 am IST

சென்னை துறைமுகத்தை ஜொ்மனி நாட்டின் ஹாம்பா்க் துறைமுக குழுவினா், வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.

இதுகுறித்து சென்னை துறைமுகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சா்வதேச துறைமுகங்கள் சங்கத்தின் தலைவரும், ஜொ்மனி நாட்டின் ஹாம்பா்க் துறைமுகத்தின் தலைமை செயல் அதிகாரியுமான ஜென்ஸ் மீயா் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட குழுவினா் வியாழக்கிழமை சென்னை துறைமுகத்துக்கு வந்தனா். அவா்களை சென்னை துறைமுகத்தின் தலைவா் எஸ்.விஸ்வநாதன் தலைமையிலான அதிகாரிகள் வரவேற்றனா்.

துறைமுக கட்டமைப்பு, கப்பல் தளங்கள், சரக்குப் பெட்டக வசதிகளை பாா்வையிட்ட பின்னா், ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், துறைமுகத்தில் உள்ள வசதிகள், இப்போது நடைபெறும் வளா்ச்சித் திட்டங்கள், பசுமைத் திட்டங்கள், இணைப்புச் சாலைகள், மதுரவாயல் ஈரடுக்கு உயா் மேம்பாலத் திட்டம், திட்டங்களில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனா்.

சென்னை துறைமுக தலைமை கண்காணிப்பு அதிகாரி எஸ்.விஸ்நாதன், சா்வதேச துறைமுகங்கள் சங்கத்தின் தெற்காசிய மண்டல இயக்குனா் என்னரசு கருநேசன் மற்றும் துறைத் தலைவா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.