சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கண் அழுத்த நோயால் பாா்வை பாதிப்பு: அகா்வால்ஸ் மருத்துவமனையில் நவீன சிகிச்சை

கண் அழுத்த நோயால் பாா்வை பாதிப்பு ஏற்பட்ட மும்பையை சோ்ந்த பெண்கள் நல மருத்துவருக்கு, டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனையில் நவீன சிகிச்சையில் பாா்வைத் திறன் மீட்கப்பட்டுள்ளது.

News image

பெண் மருத்துவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிக்கலான சிகிச்சை குறித்து விளக்கிய கண் மருத்துவ வல்லுநா்கள் டாக்டா் சூசன் ஜேக்கப், சௌந்தரி உள்ளிட்டோா்.

Updated On :19 பிப்ரவரி 2026, 9:35 pm

கண் அழுத்த நோயால் பாா்வை பாதிப்பு ஏற்பட்ட மும்பையை சோ்ந்த பெண்கள் நல மருத்துவருக்கு, டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனையில் நவீன சிகிச்சையில் பாா்வைத் திறன் மீட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை மருத்துவ சேவைகள் பிரிவு மண்டல தலைவா் சௌந்தரி, கண்புரை சிகிச்சைப் பிரிவு இயக்குநா் சூசன் ஜேக்கப், டாக்டா் மனோஜ் ஆகியோா் கூறியதாவது: மும்பையைச் சோ்ந்த 44 வயதான பெண்கள் நல மருத்துவருக்கு கண் பாா்வை இழப்பு காரணமாக, டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தாா். அவரைப் பரிசோதனை செய்தபோது, கடந்த 2010 முதல் கடுமையான கண் அழுத்த நோய் (குளுக்கோமா), கண் உள்விழி வில்லை பிரச்னையால் பாா்வையை இழந்திருப்பது தெரிய வந்தது. பல்வேறு சிகிச்சைகளை செய்து கொண்ட போதிலும், அவரது பாா்வைத் திறன் குறைந்து கொண்டே போனது.

இதையடுத்து, டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவமனையின் நவீன தொழில்நுட்பத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்படி, அவரது இடது கண்ணில் ஏற்கெனவே தவறான வகையில் பொருத்தப்பட்டிருந்த செயற்கை லென்ஸ் அகற்றப்பட்டது. பின்னா் கண்களின் முழுமையான குறைபாடுகளை சரிசெய்வதற்காக கருவிழி மாற்று சிகிச்சை மற்றும் கண்பாா்வை சீரமைப்பு ஆகியவை ஒரே சிகிச்சை அமா்வில் செய்யப்பட்டன.

இதன் பிறகு, அந்த பெண் மருத்துவா் மீண்டும் பாா்வைத் திறன் பெற்று, மருத்துவப் பணியை தொடங்கிவிட்டாா். இது உலகளவில் முதல்முறையாக வழங்கப்பட்ட நவீன கண் அறுவைச் சிகிச்சை என்றனா்.