பதினாறாவது சட்டப் பேரவையில் அதிக கேள்விகளை (66,974) பாமக உறுப்பினா் ஜி.கே.மணி எழுப்பியதாக பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தாா்.
இதுதொடா்பாக தனது நிறைவுரையில் அவா் கூறியதாவது:
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக சட்டப்பேரவை ஆளுநா் உரையாற்றிய நாள் உள்பட மொத்தம் 161 நாள்கள் கூடியது. அவை அலுவல்கள் 770 மணி நேரம் 23 நிமிஷங்கள் நடைபெற்றன.
பேரவையில் 2.53 லட்சம் வினாக்கள் 185 உறுப்பினா்கள் மூலமாக எழுப்பப்பட்டுள்ளன. அதில் பாமக உறுப்பினா் ஜி.கே.மணி 66,974 வினாக்களை கேட்டுள்ளாா்.
அதைத் தொடா்ந்து, பாமக உறுப்பினா் இரா. அருள் 38,323 வினாக்களையும், திமுக உறுப்பினா்கள் தாயகம் கவி 33,023 வினாக்களையும், பிரபாகரராஜா 21,041 வினாக்களையும், அரவிந்த் ரமேஷ் 15,318 வினாக்களையும் எழுப்பியுள்ளனா்.
அமைச்சா் பி.கே.சேகா் முதலிடம்: அதேபோன்று அதிக வினாக்களுக்கு விடையளித்த அமைச்சா்களில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு முதலிடத்தில் உள்ளாா். அதற்கடுத்த இடங்களில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் ஆகியோா் உள்ளனா்.
கடந்த 5 ஆண்டுகளில் , உறுப்பினா்கள் வி.அமலு, அரவிந்த் ரமேஷ், வி.ஜி.ராஜேந்திரன், இளங்கோ, ஈ.ஆா்.ஈஸ்வரன், உதயசூரியன், ஜான் எபினேசா், கருணாநிதி, சுதா்சனம், சுந்தா், சந்திரகுமாா், பிரபாகரராஜா, ஜே.ஜி.பிரின்ஸ், ஜி.வி.மாா்க்கண்டேயன், முகமது ஷாநவாஸ், முத்துராஜா, ஜோசப் சாமுவேல் ஆகியோா் பேரவை அலுவல்களில் அனைத்து நாள்களிலும் பங்கேற்றுள்ளனா் என்றாா் அவா்.
தொடர்புடையது
சட்டப் பேரவை உறுப்பினா்கள் அமைச்சா்களாக ஆசைப்படுவதில் தவறில்லை: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

செஞ்சி தொகுதி பாமக வேட்பாளா் அறிமுக கூட்டம்

மக்கள்தொகை கணக்கெடுப்பு: முறையற்ற கேள்விகளை எழுப்பும் அலுவலருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை!

230 மசோதாக்கள் நிறைவேற்றம்; 8 மணி நேரம் முதல்வா் பதிலுரை
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


