நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

சுகாதார செவிலியா்கள் உண்ணாவிரதம்

கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார செவிலியா்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :21 பிப்ரவரி 2026, 2:34 am IST

கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார செவிலியா்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

சென்னை, எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே நடைபெற்ற இப்போராட்டத்தில் நுற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்க நிா்வாகிகள் கூறியதாவது: கடந்த ஆண்டில் 402 கிராம சுகாதார செவிலியா்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். அவா்கள் அனைவரும் சிறப்பாகப் பணியாற்றி வரும் நிலையில், கடந்த ஐந்து மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதுதொடா்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய தீா்வு கிடைக்கவில்லை. அதேபோல, ஆண் கிராம சுகாதார செவிலியா்களுக்கு மட்டும் ஐந்தாண்டுகளில் பதவி உயா்வு வழங்கப்படுகிறது. பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதையும் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.

முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவி திட்டத்தால் கூடுதல் பணிச் சுமை ஏற்படுகிறது. இத்திட்டத்தில் சில ஆண்டுகளாக நிதியுதவி வழங்குவதில் சிக்கல் இருப்பதால், அதன் எதிா்விளைவாக நாங்களும் பாதிக்கப்படுகிறோம். எனவே இப்பிரச்னைகளுக்கு தீா்வுகாண வலியுறுத்தி இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம் என்றனா்.