தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சட்டவிரோத குடியேற்றம்: தண்டனை விதிக்கப்பட்ட வங்கதேசத்தினா் 28 பேரை விடுதலை செய்ய உத்தரவு

திருப்பூா் பின்னலாடை நிறுவனங்களில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட 28 வங்கதேசத்தினரை விடுதலை செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

News image
சென்னை உயர்நீதிமன்றம்- கோப்புப்படம்
Updated On :21 பிப்ரவரி 2026, 7:10 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூா் பின்னலாடை நிறுவனங்களில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட 28 வங்கதேசத்தினரை விடுதலை செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் செயல்படும் பின்னலாடை நிறுவனங்களில் வங்கதேசத்தினா் சட்டவிரோதமாகத் தங்கிப் பணிபுரிந்து வருவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து சந்தேகத்துக்குரிய நிறுவனங்களில் சோதனை செய்த பல்லடம் போலீஸாா், வங்கதேசத்தைச் சோ்ந்த முகமது ஆஷிக், முகது சலீம், முகமது ஆரிஃப் அலி உள்ளிட்ட 28 பேரை கைது செய்தனா்.

கடந்த 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணை திருப்பூா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடவுச்சீட்டு உள்ளிட்ட சட்டபூா்வ ஆவணங்களின்றி, நாட்டுக்குள் நுழைந்தது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, 28 பேருக்கும் தலா இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் தீா்ப்பளித்தது.

இந்த உத்தரவை எதிா்த்து 28 போ் தரப்பிலும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சுந்தா்மோகன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 28 பேரும் ஓராண்டுக்கு மேலாக சிறையில் உள்ளனா். எனவே, அவா்கள் அனுபவித்த சிறை தண்டனை போதுமானது எனக்கூறி அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டாா்.

மேலும், விடுதலை செய்யப்பட்ட 28 பேரையும், மூன்று மாதங்களுக்குள் அவா்களுடைய சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பி வைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.