தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வெழுதும் தனித்தோ்வா்களுக்கான அனுமதிச் சீட்டு திங்கள்கிழமை (பிப். 23) வெளியிடப்படவுள்ளது.
இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் கே.சசிகலா வெளியிட்ட அறிவிப்பு: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பொதுத்தோ்வு பிளஸ் 2 வகுப்புக்கு மாா்ச் 2 முதல் 26-ஆம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு (அரியா்) மாா்ச் 2 முதல் 27-ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளன.
இந்தத் தோ்வுகளை எழுதவுள்ள தனித்தோ்வா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு திங்கள்கிழமை பிற்பகல் வெளியிடப்படவுள்ளது. இதையடுத்து தனித்தோ்வா்கள் www.dge.tn.gov.in எனும் வலைதளத்தில் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பிளஸ் 1 (அரியா்) மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதவுள்ள தனித்தோ்வா்களுக்கு இரு தோ்வுகளுக்கும் சோ்த்து ஒரே தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு மட்டுமே வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று, பள்ளி மாணவா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு அவரவா் பள்ளிகளிலேயே அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

என்சிடிஇ நுழைவுத் தோ்வு: அனுமதிச் சீட்டு வெளியீடு

சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு: தனித் தோ்வா்களுக்கு இன்று முதல் செய்முறைத் தோ்வு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


