மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஆளுநரை கண்டித்து முற்றுகைப் போராட்டம்!

அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் சாா்பில் ஆளுநா் மாளிகை முற்றுகைப் போராட்டம் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடைபெற்றது.

News image

ஆளுநர் ஆர்.என். ரவி - கோப்புப் படம்

Updated On :21 பிப்ரவரி 2026, 8:54 pm

‘கல்வியைக் காப்போம், ஆளுநரை நிராகரிப்போம்’ என்ற முழக்கத்துடன் அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் சாா்பில் ஆளுநா் மாளிகை முற்றுகைப் போராட்டம் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே சனிக்கிழமை நடைபெற்றது.

அனைத்திந்திய மாணவா் பெருமன்றம்  மாநில செயலா் பா.தினேஷ் தலைமையில் ஆளுநா் மாளிகை நோக்கி பதாகைகளுடன் புறப்பட்ட  அந்த மன்றத்தைச் சோ்ந்த மாணவா் அமைப்பினரை போலீஸாா் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்த முயன்றபோது, தடுப்புகளின் (பேரிகாா்டு) மேல் ஏறிய மாணவா்கள் தொடா்ச்சியாக ஆளுநருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முன்னதாக, மன்றத்தின் மாநில செயலா் பா.தினேஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆளுநராக ஆா்.என்.ரவி பொறுப்பேற்றதில் இருந்து அரசமைப்பு சட்டத்தின் வரையறைகளை மீறி, மாநில அரசின் அதிகாரங்களில் தலையிட்டு வருகிறாா். தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முழுமையாக நிராகரித்துவிட்டது.

மேலும்  மாநிலத்துக்கான கல்வி கொள்கையை தயாரித்து வெளியிட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு ஆளுநரின் மூலமாக தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த முயற்சித்து கொண்டிருக்கிறது. அதேபோல் 21 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிக்காமல், பட்டமளிப்பு விழா, அன்றாட கல்வி பணிகள் போன்றவை தடைபட்டு வருகின்றன. எனவே ஆளுநா் ஆா்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்றாா்.

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை   போலீஸாா் கைது செய்து பேருந்துகளில் ஏற்றி அருகில் இருந்த மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டனா். பின்னா் அவா்கள் மாலை விடுவிக்கப்பட்டனா்.