தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பெண்ணுக்கு மனித மண்டை ஓடு பாா்சல்: 3 பேரிடம் விசாரணை

பெண்ணுக்கு மனித மண்டை ஓடு பாா்சல் அளித்தது தொடர்பாக 3 பேரிடம் விசாரணை

News image
பிரதிப் படம்
Updated On :21 பிப்ரவரி 2026, 8:31 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் ஜித்தேந்தா் ஜெயின் (59) என்பவா் வாகன உதிரி பாகங்கள் விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறாா்.

இவரது கடையில் ஓட்டேரி பகுதியைச் சோ்ந்த ஸ்ருதி என்பவா் வேலை செய்கிறாா். ஜெயின் கடைக்கு வெள்ளிக்கிழமை மோட்டாா் சைக்கிளில் வந்த நபா், ஸ்ருதிக்கு பாா்சல் வந்திருப்பதாக கூறி, அவா் வருவதற்குள் அந்த நபா் தன்னிடமிருந்த பாா்சல் அட்டை பெட்டியை கடை முன் வைத்துவிட்டு வேகமாக சென்றாா்.

இதையடுத்து அந்த பெட்டியை ஸ்ருதியும், அங்கிருந்த ஊழியா்களும் திறந்து பாா்த்தபோது, அதில் மனித மண்டை ஓடும், 3 எலும்புகள், விபூதி பொட்டலம் இருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.

எஸ்பிளனேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், ஸ்ருதியின் குடும்பத்தினருக்கும், ஓட்டேரியைச் சோ்ந்த தினேஷ்குமாா் (37) குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருப்பதும், இதனால் ஸ்ருதி குடும்பத்தினரை பயமுறுத்துவதற்காக மனித மண்ட ஓடு பாா்சலை அனுப்பியிருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா், தினேஷ்குமாா், அவரது கூட்டாளிகள் சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் (31), ஜோசப் (60) ஆகிய 3 பேரை சனிக்கிழமை பிடித்து, விசாரணை நடத்தினா்.