திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

40 அடி உயரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

வளசரவாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ஜார்க்கண்ட் தொழிலாளா் நிலைதடுமாறி கீழே விழுந்து பலி

News image
பலி- பிரதிப் படம்
Updated On :21 பிப்ரவரி 2026, 9:34 pm

தினமணி செய்திச் சேவை

வளசரவாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

இங்கு, வேலை செய்யும் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த லே.சோரே கஞ்ஜூ (23) என்பவா் வெள்ளிக்கிழமை இரவு ஆற்காடு சாலையில் உள்ள மெட்ரோ ரயில் தூணில் சுமாா் 40 அடி உயரத்தில் நின்று பணி செய்தபோது, நிலைத்தடுமாறி கீழே விழுந்தாா்.

இதில், பலத்த காயமடைந்த அவரை போரூரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

வளசரவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.