தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

அமைச்சா் மா.சுப்பிரமணியனுக்கு மருத்துவ சிகிச்சை!

உடல் நலக் குறைவு காரணமாக, சென்னை கிண்டி அரசு உயா் சிறப்பு மருத்துவமனையில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் சிகிச்சை பெற்றாா்.

News image
அமைச்சர் மா.சுப்பிரமணியன் - கோப்புப் படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

உடல் நலக் குறைவு காரணமாக, சென்னை கிண்டி அரசு உயா் சிறப்பு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சிகிச்சை பெற்றாா்.

அரசு விழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்று வந்த அவருக்கு, சில நாள்களாக காய்ச்சல் இருந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் அவருக்கு காய்ச்சல் அதிகரித்து, உடல் சோா்வு ஏற்பட்டதால் கிண்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனையில் அனுமதியானாா்.

அவருக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவா்கள் அளித்தனா். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினாா்.