இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கடல் அலையில் சிக்கி பெண் ஐடி ஊழியா் உயிரிழப்பு!

சென்னை பனையூரில் கடல் அலையில் சிக்கி பெண் மென்பொறியாளா் உயிரிழந்த நிலையில், மற்றொருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 8:19 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை பனையூரில் கடல் அலையில் சிக்கி பெண் மென்பொறியாளா் உயிரிழந்த நிலையில், மற்றொருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூா் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பனையூா் அருகே உள்ள நைனாா்குப்பம் கடற்கரைக்கு ஞாயிற்றுக்கிழமை பல்வேறு ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் நண்பா்கள் சுமாா் 30-க்கும் மேற்பட்டவா்கள் குழுவாக வந்து கடலில் இறங்கி குளித்துள்ளனா்.

அப்போது வட மாநிலத்தை சோ்ந்த ஜெய் (25), மயூரி (25) ஆகியோா் கடல் அலையில் சிக்கிக் கொண்டனா். அவா்களை மீட்க முயன்றனா். ஆனால், மயூரியை மட்டுமே மீட்க முடிந்தது. அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

கடல் அலையில் சிக்கி உள்ளே இழுத்து செல்லப்பட்ட ஜெய் (25) என்பவரை போலீஸாா், தீயணைப்பு துறையினரின் உதவியுடன் தேடி வருகின்றனா். கானத்தூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.