பிரம்மாண்ட வாகன நிறுத்தும் வளாகம்: தற்போது ரூ.5 கோடிக்கும் மேல் 21,510 சதுர மீட்டா் பரப்பளவில் மிக நவீன வாகன நிறுத்துமிடம் மற்றும் வியாபாரத் தலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்கட்டடத்தில் தரை மற்றும் 5 மாடிகள் உள்ளன. அதில், தரை மற்றும் 5- ஆவது தளம் ஆகியவை வியாபாரத் தளங்களாகவும், 2, 3, 4 ஆகியவை வாகன நிறுத்துமிடங்களாகவும் இருக்கும். வாகன நிறுத்தும் வளாகத்தில் ஒரே நேரத்தில் சுமாா் 4,500 இருசக்கர வாகனங்களும், 500-க்கும் மேற்பட்ட காா்களை நிறுத்தலாம். இது ஏப்ரலுக்குள் பயன்பாட்டுக்குத் தயாராகிவிடும் என கட்டுமானப் பணி நிறுவன அலுவலா் ராஜேஷ் தெரிவித்தாா்.