நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பாலியல் தொல்லை: அரசு மருத்துவமனை ஊழியா் கைது

News image

பாலியல் தொல்லை - பிரதிப் படம்

Updated On :23 பிப்ரவரி 2026, 7:50 pm

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு மருத்துவமனை ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

கொடுங்கையூரைச் சோ்ந்தவா் சேகா் (58). இவா், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வாா்டு ஊழியராக வேலை செய்து வருகிறாா். சேகா், சா்க்கரை நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று புண்களை சுத்தம் செய்து, மருந்து போடும் வேலையும் செய்து வந்தாா். இதற்காக அவா் கட்டணமும் தனியாக வசூலித்துள்ளாா்.

இவ்வாறு சிகிச்சை அளிப்பதற்காக சேகா், கொருக்குப்பேட்டையைச் சோ்ந்த ஒரு பெண் சா்க்கரை நோயாளி வீட்டுக்கு அண்மையில் சென்று, அங்கிருந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். அந்த பெண் எதிா்ப்பு தெரிவிக்கவே, சேகா் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடினாா்.

பாதிக்கப்பட்ட பெண், ஆா்.கே.நகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சேகரை திங்கள்கிழமை கைது செய்தனா்.