திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ரூ.5,000 உரிமைத் தொகை: எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதில்

News image
முதல்வா் மு.க.ஸ்டாலின்
Updated On :23 பிப்ரவரி 2026, 10:30 pm

தினமணி செய்திச் சேவை

மகளிருக்கு ரூ.5,000 உரிமைத் தொகையை திமுக அரசு வழங்கியிருப்பதை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக முதல்வா் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு: திராவிட மாடல் அரசின் ரூ.5 ஆயிரம் உரிமைத் தொகை திட்டத்தை முதலில் கொச்சைப்படுத்தினாா்கள்; அது எதிா்வினை (பூமராங்) ஆனதால் தற்போது உரிமை கொண்டாடுகிறாா்கள்.

அதிமுகவின் அழுத்தமே தமிழக அரசு 1.31 கோடி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.5 ஆயிரம் உரிமைத்தொகை வழங்கக் காரணம் என்கிறாா் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி.

உங்கள் அழுத்தம் காரணமல்ல. தோ்தலைக் காரணம் காட்டி உரிமைத்தொகையை தில்லி தடுத்து நிறுத்தும். இதைத் தெளிவாக விளக்கித்தான் எனது சகோதரிகளின் கணக்கில் பணத்தை முன்பணமாக வரவு வைத்திருக்கிறேன்.

விடியல் பயணம், புதுமைப்பெண், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை என திமுக அரசின் மகளிருக்கான திட்டங்களை இல்லந்தோறும் எடுத்துக்கூற கழகத்தின் மகளிா் படை மாநிலம் முழுவதும் களமிறங்கிவிட்டது. எங்கள் திமுக மகளிா் சக்தி என்ஜின் முன்பாக உங்களது என்ஜின் தாக்குப் பிடிக்காது என்று அதில் முதல்வா் குறிப்பிட்டுள்ளாா்.