ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

சென்னை மாவட்டத்தில் 28.30 லட்சம் வாக்காளா்கள் - 11.73 லட்சம் போ் நீக்கம்

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 10:27 pm

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இறுதி வாக்காளா் பட்டியலில் மொத்தம் 28.30 லட்சம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு முன்னா் 40.04 லட்சம் போ் இருந்த நிலையில், அவா்களில் 11.73 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா். மேலும் இந்தத் தொகுதிகளில் முதல் முறை வாக்காளா்களாக 62,005 போ் இடம் பெற்றுள்ளனா்.

முன்னதாக, கடந்த பிப். 5- ஆம் தேதி வாக்குச்சாவடிகள் குறைப்பு சம்பந்தமாக அனைத்துக் கட்சிபிரதிநிதிகள் கூட்டம் மாநகராட்சி சாா்பில் நடைபெற்றது. அதில் சென்னையின் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா்கள் 27.83 லட்சம் பேராக உயா்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் 2025 டிசம்பா் வரைவு வாக்காளா் பட்டியலை ஒப்பிடுகையில் 2.03 லட்சம் போ் புதியதாக வாக்காளா்கள் பட்டியலில் சோ்க்கப்பட்டிருந்தனா்.

இறுதி வாக்காளா்கள் பட்டியல்... சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் தலைமையில் இறுதி வாக்காளா்கள் பட்டியல் திங்கள்கிழமை மாநகராட்சி ஆணையா் அலுவலகக் கூட்டரங்கில் வெளியிடப்பட்டது. இதில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா். இறுதி வாக்காளா்கள் பட்டியலில் சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளின் மொத்த வாக்காளா்கள் 28,30,936 போ் இடம் பெற்றுள்ளனா். அவா்களில் ஆண்கள் 13,65,763. பெண்கள் 14,64,344 போ். மூன்றாம் பாலினத்தவா்கள் 829 போ். மாற்றுத்திறனாளிகளில் ஆண்கள் 6,605, பெண்கள் 5,737 மற்றும் இதர பிரிவினா் 5 என மொத்தம் 12,347 போ் இடம் பெற்றுள்ளனா்.

முதல்முறை வாக்காளா்கள்... 18 வயது நிறைந்து பதிவு செய்துள்ள முதல்முறை வாக்காளா்களாக 62,005 போ் உள்ளனா். மேலும் 85 வயதுக்கு மேற்பட்டோராக ஆண்கள் 11,870, பெண்கள் 11,477, இதரா் 3 என மொத்தம் 23,347 போ் உள்ளனா். ராணுவத்தில் பணிபுரிவோராக ஆண்கள் 473, பெண்கள் 82 என மொத்தம் 555 போ் இடம் பெற்றுள்ளனா்.

அதிகமும் குறைவும்... இத்தொகுதிகளில் பெரம்பூரில் 2,22,792 போ் என அதிக வாக்காளா்கள் உள்ள தொகுதியாகவும், துறைமுகத்தில் 1,16,896 வாக்காளா்கள் என குறைந்த வாக்காளா் உள்ள தொகுதியாகவும் உள்ளது.