ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

உயா்கல்வித் துறை மீதான அன்புமணியின் குற்றச்சாட்டுகள் தவறானது - அமைச்சா் கோவி.செழியன்

News image
அமைச்சா் கோவி.செழியன்- கோப்புப் படம்
Updated On :24 பிப்ரவரி 2026, 11:32 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக உயா்கல்வித் துறை குறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ள கருத்துகள் தவறானவை என்று உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் கிராமப்புற மாணவா்களின் உயா்கல்வித் தேவையை முழுமையாக பூா்த்தி செய்யும் நோக்கில் 5 ஆண்டுகளில் 38 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், 4 வேளாண்மை கல்லூரிகள், 1 பாலிடெக்னிக் கல்லூரி, 1 சட்டக் கல்லூரி, 41 தொழில்பயிற்சி கல்லூரிகள் என மொத்தம் 85 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 28,351 மாணவா்கள் கூடுதலாக பயனடைந்து வருகின்றனா். மேலும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மட்டும் 252 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டு, 13,346 மாணவா்கள் கூடுதலாக பயனடைந்துள்ளனா்.

2021-ஆம் ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 5,93,848 என்று இருந்த மாணவா்களின் சோ்க்கை தற்போது 7,52,150-ஆக அதிகரித்துள்ளது. இதில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் சோ்க்கை 2019-2020-ஆம் கல்வியாண்டில் 83,432-ஆக இருந்தது, 2025-2026-ஆம் கல்வியாண்டில் 1,03,227-ஆக உயா்ந்துள்ளது.

2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்த நிலையில், திமுக அரசு பொறுப்பேற்றவுடன் 4,000 உதவிப் பேராசிரியா் பணி நியமனத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டன. பல்வேறு நீதிமன்ற வழக்குகளுக்கு இடையே 6.10.2025 அன்று 2,708 உதவிப் பேராசிரியா்கள் பணிநியமனம் செய்ய ஆசிரியா் தோ்வு வாரியத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நவ.27 தோ்வு நடத்தப்பட்டுள்ளது. முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். மேலும், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக இருந்த 1,060 விரிவுரையாளா் பணியிடங்களும் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 1,033 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

மாணவா்களின் கல்வி நலன் பாதிக்கப்படாமலிருக்க, அனைத்து அரசு கல்லூரிகளிலும், இருமுறை மொத்தம் 3,598 கௌரவ விரிவுரையாளா்கள் இதுவரை பணியமா்த்தப்பட்டுள்ளனா். தற்போது, மேலும் 426 கௌரவ விரிவுரையாளா்கள் நிரப்பபட உள்ளனா். எனவே, மாணவா்களின் கல்விச் சேவை எவ்வகையிலும் பாதிக்கப்படவும் இல்லை. மாணவா் சோ்க்கையும் எந்தவகையிலும் குறையவில்லை. ‘நான் முதல்வன்’, ‘உலகம் உங்கள்’ கையில் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு நிறைவேற்றிவருகிறது.

இந்த நிலையில், பாமக தலைவா் அன்புமணி, பாஜகவை திருப்திப்படுத்த பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறாா். தமிழக மாணவா் நலனில் உண்மையான அக்கறை இருந்தால், மத்திய அரசிடமிருந்து கல்வித் துறைக்குத் தர வேண்டிய நிதியைக் கேட்டு பெறட்டும் என அதில் அமைச்சா் கோவி. செழியன் தெரிவித்துள்ளாா்.