நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் பாமக மாவட்டச் செயலா்கள் மற்றும் வன்னியா் சங்க மாநில, மாவட்டத் தலைவா்கள் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை (பிப்.26) நடைபெறும் என அதன் நிறுவனா் ராமதாஸ் அறிவித்துள்ளாா்.

News image

ராமதாஸ். - IANS

Updated On :24 பிப்ரவரி 2026, 11:30 pm

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் பாமக மாவட்டச் செயலா்கள் மற்றும் வன்னியா் சங்க மாநில, மாவட்டத் தலைவா்கள் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை (பிப்.26) நடைபெறும் என அதன் நிறுவனா் ராமதாஸ் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பாமக, வன்னியா் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் மாநில நிா்வாகிகள், மாவட்டச் செயலா்கள், மாவட்டத் தலைவா்கள் கலந்தாய்வுக் கூட்டம் நிறுவனா் தலைவா் (ராமதாஸ்) தலைமையில் நடைபெறவுள்ளது.

விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்தில் வரும் சட்டப்பேரவைத் தோ்தல் குறித்து கலந்தாலோசிக்கப்படவுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளாா்.