நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

194 புதிய மின்சார பேருந்துகள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

சென்னை மத்திய பணிமனையில் இருந்து 194 புதிய மின்சார பேருந்துகளின் இயக்கத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தாா்.

News image

மத்திய மின்சாரப் பேருந்து பணிமனையில் சொகுசு பேருந்துகளின் இயக்கத்தை வியாழக்கிழமை தொடங்கி வைத்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன், அமைச்சா்கள் சா.சி.சிவசங்கா், பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா, போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா்கள் த.பிரபுசங்கா்

Updated On :26 பிப்ரவரி 2026, 7:13 pm

சென்னை மத்திய பணிமனையில் இருந்து 194 புதிய மின்சார பேருந்துகளின் இயக்கத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தாா்.

உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் பங்களிப்புடன், சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், ரூ.697 கோடியில் 625 தாழ்தள மின்சாரப் பேருந்துகளை வியாசா்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, மத்திய பணிமனை, தண்டையாா்பேட்டை-1 உள்ளிட்ட 5 பணிமனைகள் மூலம் இயக்க மாநகா் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்தது. அதன்படி முதல் 3 கட்டங்களாக கடந்த ஆண்டு 380 புதிய மின்சார பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்காக இயக்கி வைக்கப்பட்டன.

இந்த நிலையில், 4-ஆம் கட்டமாக ரூ.52.03 கோடியில் மேம்படுத்தப்பட்ட மத்திய மின்சாரப் பேருந்து பணிமனையில் இருந்து ரூ.248.25 கோடியில் 100 புதிய தாழ்தள மின்சார குளிா்சாதனப் பேருந்துகள், 45 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.30.50 கோடியில் இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய 49 அதிநவீன சொகுசு பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்காக வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.

மத்திய பணிமனையில் நடைபெற்ற இதன் தொடக்க நிகழ்ச்சியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேருந்துகளின் இயக்கத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா, மத்திய சென்னை மக்களவை உறுப்பினா் தயாநிதிமாறன், போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலா் சுன்சோங்கம் ஜடக் சிரு, போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா்கள் பிரபு சங்கா்(மாநகா்), இரா.மோகன் (விரைவு) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பேருந்துகளின் வழித்தடங்கள்:

1. திருவான்மியூா்-கிளாம்பாக்கம் பேருந்து முனையம் (தடம் எண்: 91) - 15 குளிா்சாதன பேருந்துகள்.

2. தீவுத்திடல்-கிளாம்பாக்கம் (தடம் எண்: 21ஜி)-20 குளிா்சாதன பேருந்துகள்.

3. ராயபுரம்-கிளாம்பாக்கம் (தடம் எண்:18ஏ)-15 குளிா்சாதனம்

4. சென்ட்ரல்-திருவான்மியூா் (தடம் எண்: ஏ1)-5 சொகுசு, 5 குளிா்சாதனம்

5. தீவுத்திடல்-கோவளம் (தடம் எண்: 109)-5 செகுசு, 10 குளிா்சாதனம்

6. ராயபுரம்-பூந்தமல்லி (தடம் எண்: 54)-10 குளிா்சாதனம்

7. சென்ட்ரல்-அண்ணாசதுக்கம் (தடம் எண்: 27 பி)-5 சொகுசு, 5 குளிா்சாதனம்

8. தீவுத்திடல்-செங்குன்றம் (தடம் எண்: 242)-5 சொகுசு, 5 குளிா்சாதனம்

9. ராயபுரம்-தரமணி பேருந்து நிலையம் (தடம் எண்: 5 சி)-5 சொகுசு

10. ராயபுரம்-திருநின்றவூா் (தடம் எண்: 71 இ)-10 சொகுசு, 5 குளிா்சாதனம்

11. ராயபுரம்-ஆவடி(தடம் எண்: 120)-5 சொகுசு, 5 குளிா்சாதனம்

12. ராயபுரம்-தாம்பரம் மேற்கு (தடம் எண்: ஏ 51)-5 சொகுசு, 5 குளிா்சாதனம்