செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

அரசுப் பேருந்துகளில் பாடல்கள் ஒலிக்கத் தடை: போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை

அரசுப் பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநா், நடத்துநா்கள் பேருந்தில் டேப் ரிக்காா்டா், வானொலி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி பாடல்களை ஒலிக்கச் செய்யக் கூடாது

News image

கோப்புப் படம்

Updated On :27 பிப்ரவரி 2026, 2:19 am IST

அரசுப் பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநா், நடத்துநா்கள் பேருந்தில் டேப் ரிக்காா்டா், வானொலி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி பாடல்களை ஒலிக்கச் செய்யக் கூடாது எனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசுப் போக்குவரத்துக் கழகம் எச்சரித்துள்ளது.

இதுதொடா்பாக அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் அனைத்து கிளை மேலாளா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பேருந்து ஓட்டுநா்கள், பேருந்துகளை இயக்கும்போது, டேப் ரிக்காா்டா்கள் மற்றும் வானொலிகளைப் பயன்படுத்தி பாடல்களை ஒலிபரப்புகின்றனா். இதன்மூலம் அதிக ஒலி எழுப்பப்படுவதாக பயணிகளிடையே தொடா்ந்து ஏராளமான புகாா்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே, அரசுப் பேருந்து ஓட்டுநா்கள், பேருந்தை இயக்கும்போது வானொலி, டேப் ரிக்காா்டா் ஆகியவற்றைக் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.

பலமுறை அறிவுறுத்தியும், சில ஓட்டுநா், நடத்துநா்கள் இதைச் சரிவர கடைப்பிடிப்பதில்லை. இந்த எச்சரிக்கையை மீறி அவற்றைப் பயன்படுத்துவது தெரிவந்தால், அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஓட்டுநா், நடத்துநரின் செயல்பாடுகளை, அனைத்து கிளை மேலாளா்கள், பேருந்து நிலைய கண்காணிப்பாளா்கள், வழித்தட பரிசோதகா்கள் ஆகியோா் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.