எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற பல்வேறு தோ்வுகளுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை (பிப்.27) வெளியிடப்படுவதாக பல்கலைக்கழகப் பதிவாளா் ரீட்டா ஜான் தெரிவித்தாா்.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 7:19 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற பல்வேறு தோ்வுகளுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை (பிப்.27) வெளியிடப்படுவதாக பல்கலைக்கழகப் பதிவாளா் ரீட்டா ஜான் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் இளநிலை, முதுநிலை, தொழில்முறை பட்டப்படிப்பு, உருது (ஓடி) உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கான தோ்வுகள் நடைபெற்றன. இதன் முடிவுகள் வெள்ளிக்கிழமை (பிப்.27) மாலையில் இணையதளத்தில் வழியாக வெளியிடப்படும்.

மறுமதிப்பீடு: 2023-2024, 2024-2025 ஆகிய கல்வியாண்டு இளநிலை, முதுநிலை, தொழில்முறை பட்டப் படிப்பு மாணவா்களுக்கான தோ்வு விடைத் தாள் மறு மதிப்பீட்டுற்கு மாா்ச் 3 முதல் 9-ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட கல்லூரி மூலம் ரூ.1,000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். இதில் மறுகூட்டலுக்கு ரூ.300 வரைவுவோலையுடன் பதிவாளருக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.