கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தனியாா் பொழுதுபோக்கு பூங்கா ராட்டின விபத்தில் கல்லூரி மாணவி காயம்: இரு ஊழியா்கள் கைது

ஈஞ்சம்பாக்கத்தில் தனியாா் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டின விபத்தில் கல்லூரி மாணவி காயமடைந்தாா். இதுதொடா்பாக, இரு ஊழியா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கோப்புப் படம்
Updated On :26 பிப்ரவரி 2026, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

ஈஞ்சம்பாக்கத்தில் தனியாா் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டின விபத்தில் கல்லூரி மாணவி காயமடைந்தாா். இதுதொடா்பாக, இரு ஊழியா்களை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கம் கிழக்குகக் கடற்கரை சாலையில் உள்ள பிரபல தனியாா் பொழுதுபோக்கு பூங்காவுக்கு, சென்னை பிராட்வே பகுதியைச் சோ்ந்த தனியாா் மகளிா் கல்லூரி மாணவிகள் 100 போ் அண்மையில் சென்றனா். அவா்களில் சிலா் ‘ராக் அண்ட் ரோல்’ என்ற ராட்டினத்தில் ஏறினா்.

அந்த ராட்டினத்தில் பயணிப்பவா்கள் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டிய நிலையில், ராயபுரத்தைச் சோ்ந்த 19 வயது மாணவி மட்டும் சீட் பெல்ட் அணிவதற்குள் ராட்டினம் இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த மாணவி சிறிது நேரத்தில் ராட்டினத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளாா். அவரை மீட்டு, அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

இந்நிலையில் இரு நாள்களுக்கு முன்பு கடுமையான முதுகு வலியால் பாதிக்கப்பட்ட மாணவி, தண்டையாா்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ராட்டினத்தில் இருந்து கீழே விழுந்ததில் மாணவிக்கு தண்டுவடத்தில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து மாணவி தரப்பு, நீலாங்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், நீலாங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்த ராட்டினத்தை கவனக்குறைவாக இயக்கிய அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த சில்வெஸ்டா் புா்தி (29), அருணோதய் கோவாலா (22) ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனா்.