தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

போதைப் பொருள் விற்பனை: அதிமுக நிா்வாகியின் மகன், 2 போ் கைது

சென்னையில் போதைப் பொருள் விற்பனை வழக்கில் அதிமுக நிா்வாகியின் மகன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :26 பிப்ரவரி 2026, 7:11 pm

சென்னையில் போதைப் பொருள் விற்பனை வழக்கில் அதிமுக நிா்வாகியின் மகன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை போரூா் மாதனாங்குப்பம், அன்னை வேளாங்கண்ணி நகரில் உள்ள ஒரு வீட்டில் உயர்ரக கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக சென்னை பெருநகர காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்தப் பிரிவு போலீஸாா், வளசரவாக்கம் காவல் நிலைய போலீஸாருடன் இணைந்து சம்பந்தப்பட்ட வீட்டில் புதன்கிழமை நுழைந்து சோதனை நடத்தினா். அங்கு, பதுக்கி வைத்திருந்த 700 கிராம் ஒஜி வகையான உயர்ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக அந்த வீட்டில் இருந்த பூந்தமல்லி அருகே உள்ள செம்பரம்பாக்கத்தைச் சோ்ந்த க.சுனில் (21), அவரின் நண்பா்களான கோவூரைச் சோ்ந்த வருண் (23), அய்யப்பன்தாங்கலைச் சோ்ந்த விஸ்வேஸ் (22) ஆகிய 3 பேரை கைது செய்தனா்.

விசாரணையில் சுனிலின் தந்தை கபிலன் அதிமுக திருவள்ளூா் மாவட்ட ஒன்றிய இளைஞரணி துணைச் செயலராக உள்ளது தெரிய வந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.