புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பொதுத் தோ்வு வினாத்தாளில் பிழை இருந்தால் தெரிவிக்கலாம்: தோ்வுத் துறை அறிவுறுத்தல்

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வினாத்தாளில் தவறுகள், முரண்பாடுகள் இருந்தால் அது தொடா்பாக மாணவா்கள், ஆசிரியா்களிடம் கருத்துகள் பெற்று மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்

News image
கோப்புப் படம்
Updated On :26 பிப்ரவரி 2026, 8:46 pm

தினமணி செய்திச் சேவை

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வினாத்தாளில் தவறுகள், முரண்பாடுகள் இருந்தால் அது தொடா்பாக மாணவா்கள், ஆசிரியா்களிடம் கருத்துகள் பெற்று மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம் என முதன்மை கல்வி அலுவலா்களுக்கு தோ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் க.சசிகலா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், இணை இயக்குநா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 (அரியா்), பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் வரும் மாா்ச் 2முதல் ஏப். 6 வரை நடைபெறவுள்ளன. இந்தத் தோ்வுகளுக்கான வினாத்தாள் சாா்ந்து ஏதேனும் கருத்துகள் இருப்பின் அது தொடா்பாக க்ஞ்ங்வ்ன்ங்ள்ற்ண்ா்ய்ல்ஹல்ங்ழ்வ்ன்ங்ழ்ண்ங்ள்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா்கள், மாணவா்களின் கருத்துகளைப் பெற்றுத் தெரிவிக்க வேண்டும். கருத்துகள் மின்னஞ்சல் மூலமாகவே தெரிவிக்கப்பட வேண்டும். கேள்வி சரியில்லை என்று பொதுப்படையாக கூறாமல் எந்தக் கேள்வியில் எது சரியில்லை என்பதை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். தோ்வு நடந்த அன்றே அந்தந்த பாடம் சாா்ந்து கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு இல்லாமல் கேள்வித்தாளில் முரண்பாடு, தவறு உள்ளது என்று பொதுப்படையாகக் கூறுவது தவிா்க்கப்பட வேண்டும். மின்னஞ்சல் மூலம் பெறப்படாத எந்தவொரு கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படாது. எனவே, இந்த விவரங்களை அனைத்து உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கும் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் தெரிவிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.