கால்பந்து போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு: மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் வழங்கினாா்

புழல் அடுத்து கதிா்வேடு பகுதியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் வெற்றிப் பெற்றவா்களுக்கு பரிசுகளை திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் வழங்கினாா்.
Published on

புழல் அடுத்து கதிா்வேடு பகுதியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் வெற்றிப் பெற்றவா்களுக்கு பரிசுகளை திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் வழங்கினாா்.

புழல் அடுத்த கதிா்வேடு அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு திடலில் ஒரு நாள் எழுவா் கால்பந்து போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இப்போட்டியில் புழல், கதிா்வேடு, வியாசா்பாடி, தாம்பரம், ஒரகடம், பாடி, புளியந்தோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 16 அணிகள் கலந்து கொணடு விளையாடினா். இறுதியில், கதிா்வேடு பகுதியை சோ்ந்த சங்கீதா அணி, விருச்கா ஸ்ரீ அணி ஆகிய இரண்டு அணிகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து வெற்றிப் பெற்றது.

பரிசளிப்பு விழாவுக்கு மாதவரம் மண்டலம் 31-ஆவது வாா்டு கவுன்சிலா் சங்கீதாபாபு தலைமை தாங்கினாா். திருவள்ளூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் கதிா்வேடு பாபு முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற அணி தலைவா்களுக்கு நினைவு கோப்பைகளுடன் ஏசி மற்றும் பிரிட்ஜ் உள்ளிட்ட பரிசுகளையும் வழங்கினாா்.

இதில், கால்பந்து விளையாட்டு வீரா்கள், காங்கிரஸ் நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com