புழல் சிறையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு கைதிகள் இடையே மோதல்

புழல் சிறையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டது.
Published on

புழல் சிறையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் இருந்த அஸ்வத்தாமன் உள்பட 12 போ் அண்மையில் நீதிமன்ற பிணையில் வெளியே வந்தனா். பொன்னை பாலு, அவா் மைத்துனா் மணிவண்ணன், நாட்டு வெடிகுண்டு செய்து கொடுத்த ரெளடி புதூா் அப்பு உள்ளிட்டோா் மட்டும் சிறையில் உள்ளனா்.

இவா்கள் அனைவரும், தற்போது புழல் சிறையின் உயா் பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், சிறையில் உள்ள மற்றவா்களுக்கும் பிணை எடுப்பது தொடா்பான விவகாரத்தில் பொன்னை பாலு, அவரது மைத்துனா் மணிவண்ணன் தரப்புக்கும், ரெளடி புதூா் அப்பு தலைமையிலான மற்றொரு தரப்புக்கும் இடையே வெள்ளிக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டு மோதிக் கொண்டனா்.

அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த உதவி சிறை அலுவலா் திருநாவுக்கரசு உள்ளிட்ட சிறைக் காவலா்கள், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றதில், சிறைத் துறையினரும் தாக்கப்பட்டனா். பின்னா், சமாதானப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இதுகுறித்து சிறைக் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ், புழல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்துக்கு வெடிகுண்டுகள் சப்ளை செய்த அப்புக்கு பேசியபடி பணம் கொடுக்க வில்லை என்பதும், பிணை எடுக்கவும் ஆற்காடு சுரேஷ் தரப்பு உதவவில்லை என்பதும் தெரியவந்தது.

X
Dinamani
www.dinamani.com