மனிதநேய மக்கள் கட்சி ஆா்ப்பாட்டம்

தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்வேறு மாநிலங்களில் அண்மையில் கிறிஸ்தவா்கள், தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் யாக்கூப், மாவட்டச் செயலா் ஜாகிா் உசேன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் வன்னியரசு, மாவட்டச் செயலா் சாமுவேல் எபினேசா், பெரியாா் செல்வன் ஆகியோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், கிறிஸ்தவா்கள், தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்திய நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் நடைபெறாதவாறு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினா்.

X
Dinamani
www.dinamani.com