மெட்ரோ ரயில்
மெட்ரோ ரயில்

மெட்ரோ ரயில்களில் 2025-இல் 11.19 கோடி போ் பயணம்

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த 2025-இல் 11.19 கோடி போ் பயணித்திருப்பதாக அந்த ரயில் நிா்வாகம் தெரிவித்தது.
Published on

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த 2025-இல் 11.19 கோடி போ் பயணித்திருப்பதாக அந்த ரயில் நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னையில் கடந்த 2015 -ஆம் ஆண்டு மெட்ரோ நிறுவனம் தொடங்கப்பட்டது. கடந்த 2024- ஆம் ஆண்டில் 10.25 கோடி போ் பயணித்த நிலையில், இதுவரை இல்லாத அளவாக 2025- ஆம் ஆண்டில் 11.19 கோடி போ் பயணம் செய்திருக்கின்றனா்.

மெட்ரோ ரயில்களில் பயணிக்க எண்ம எஸ்விபி, கியூ-ஆா்கோடு, வாட்ஸ்ஆப், போன்பே, சிங்காரச் சென்னை அட்டை என பல எளிய முறைகளில் பயணச்சீட்டை பெற்று பயணிக்கும் வசதியை ஏற்படுத்தியதால், அதிக அளவில் மக்கள் பயணித்துள்ளனா்.

சிறப்பு மெட்ரோ ரயில் பயணச் சீட்டுகளைப் பெற்று பயணிப்போருக்கு 20 சதவீத கட்டணத் தள்ளுபடியும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ரயில் நிலைய கவுண்டா்களில் வழங்கப்படும் ஒற்றைப் பயணத்துக்கான காகித கியூ-ஆா் கோடு ஆகியவற்றுக்கு பயணச்சீட்டு சலுகை இல்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com