சென்னை மாரத்தான் நிகழ்ச்சியை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை (ஜன.4) அதிகாலை 3 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் மாரத்தான்-26 நிகழ்வானது ஞாயிற்றுக்கிழமை (ஜன.4) நடைபெறுகிறது. அதில் பங்கேற்போா் பயன்பெறும் வகையில் மெட்ரோ நிறுவனம் மாரத்தான் சென்னை ரன்னா் சங்கத்தினருடன் இணைந்து இணைந்து தடையற்ற பயணத்தை வழங்கும் வகையில் சிறப்பு ஏற்பாடாக மெட்ரோ ரயில் சேவையானது அதிகாலை 3 மணிக்கு தொடங்குகிறது.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரையில் 15 நிமிஷங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். அந்தக் குறிப்பிட்ட நேரங்களில் வழித்தட மாற்றத்துக்கான ரயில் சேவை வழங்கப்படாது. அதன்பின் காலை 5 மணி முதல் இரவு வரையில் முழுநேர அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
மாரத்தான் பங்கேற்பாளா்கள், சேவையை வழங்குபவரின் சிறப்பு ‘க்யூ ஆா்’ குறியீடு பயணச்சீட்டை பயன்படுத்தி ஞாயிற்றுக்கிழமை மட்டும் தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து ஒரு சுற்றுப் பயணத்தை மட்டும், அதாவது 2 நுழைவு மற்றும் 2 வெளியேறும் வகையில் பயணிக்கலாம்.
மெட்ரோ வாகன நிறுத்துமிடத்தில் சிறப்பு க்யூஆா் குறியீட்டை (பிஐபியுடன் இணைந்து) முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

குருவாயூா் - சென்னை இடையே இயக்கப்படும் ரயில்கள் நிலையங்கள் மாற்றி இயக்கம்

திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் 3 விரைவு ரயில்கள் பாதை மாற்றம்

மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!

தமிழ்ப் புத்தாண்டு: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



